Skip to main content

இன்வென்டரியில் புதிய கேடகரி சேர்த்தல்

இந்த வழிகாட்டி, ஸ்டாஃப் செயலி மூலம் இன்வென்டரியில் ஒரு புதிய கேடகரியை
எவ்வாறு சேர்க்கலாம் என்பதை படிப்படியாக விளக்குகிறது.


தொடங்குவதற்கு முன்

இந்த செயல்முறையை மேற்கொள்ளும் முன், பின்வரும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்:

  • கேடகரி திருத்த அனுமதி (Edit access) கொண்ட ஸ்டாஃப் செயலி டெர்மினலில் உள்நுழைந்திருக்க வேண்டும்
  • மெர்சண்ட் செயலி:
    • Terminal settings → Inventory management → Category
    • அங்கு Add மற்றும் Edit அனுமதிகள் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்

Staff terminal CRUD access to category

caution

மெர்சண்ட் செயலி டெர்மினல் அமைப்புகளை மாற்றும் போது, சரியான டெர்மினல் தேர்வு செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டிப்பாக சரிபார்க்க வேண்டும்.

Merchant App terminal settings


படி 1: இன்வென்டரி மாட்யூலை திறத்தல்

  1. ஸ்டாஃப் செயலி, மேற்பகுதியில் உள்ள ப்ரொஃபைல் ஐகானை தேர்ந்தெடுக்கவும்
  2. இன்வென்டரி (inventory) → பேஸ் மெனு (Base menu)→ கேடகரி (category) என்பதைத் தேர்வு செய்யவும்

படி 2: புதிய கேடகரி சேர்க்கும் செயல்முறையை தொடங்குதல்

  1. Add Category Add button பொத்தானைத் தேர்ந்தெடுக்கவும்
  2. New Category என்ற படிவம் / உரையாடல் திரை திறக்கப்படும்

Add products

இன்வென்டரி → கேடகரி பட்டியல் திரையின் எடுத்துக்காட்டு
அடிப்படை விவரங்களுடன் புதிய கேடகரி படிவம்


படி 3: அடிப்படை விவரங்களை உள்ளிடுதல்

  1. Name புலத்தில் கேடகரியின் பெயரை உள்ளிடவும்
    • இந்த புலம் கட்டாயமானது
    • எடுத்துக்காட்டு: Beverages, Starters, Desserts
  2. Sort Order புலத்தில் இந்த கேடகரி பட்டியலில் எந்த வரிசையில் தோன்ற வேண்டும் என்பதை குறிக்கும் எண்ணை உள்ளிடவும்
    • இதுவும் கட்டாயமான புலம்
    • குறைந்த எண்ணை வழங்கினால், மெனுவில் முன்புறமாக காணப்படும்

Add Category


படி 4: பாரென்ட் (parent) கேடகரி தேர்வு (விருப்பத்தேர்வு)

  1. இந்த கேடகரி சப்-கேடகரியாக இருக்க வேண்டுமெனில்:
    • Parent category (Optional) டிராப்-டவுன் பட்டியலைத் திறக்கவும்
  2. ஏற்கனவே உள்ள ஒரு பாரென்ட் (parent) கேடகரியை தேர்ந்தெடுக்கவும்
  3. பாரென்ட் (parent) கேடகரி தேர்வு செய்யப்பட்டால், இந்த கேடகரி சப்-கேடகரியாக அமைக்கப்படும்

பாரென்ட் கேடகரி தேவையில்லையெனில்,இந்த புலத்தை காலியாக விடலாம்.

💡 குறிப்பு:
பாரென்ட் கேடகரியில் நேரடியாக பொருட்கள் இருக்காது. அதன் கீழ் சப்-கேடகரிகள் மட்டுமே இடம்பெறும்.

parent-sub Category


படி 5: விளக்கம் மற்றும் மொழிபெயர்ப்பு சேர்த்தல் (விருப்பத்தேர்வு)

  1. Description பகுதியில் கேடகரியைப் பற்றிய சுருக்கமான விளக்கத்தை உள்ளிடலாம்
    (உள் பயன்பாடு / டூல்டிப் நோக்கத்திற்கு)
  2. Translations பகுதியில்:
    • + ஐகானைத் தேர்ந்தெடுக்கவும் பல மொழி மெனு தேவையெனில்,
      வேறு மொழிகளில் கேடகரி பெயர்களை சேர்க்கலாம்

படி 6: கேடகரியை சமர்ப்பித்தல்

  1. Submit பொத்தானைத் தேர்ந்தெடுக்கவும்
  2. கீழ்கண்ட அம்சங்களை உறுதிப்படுத்தவும்:
    • பொருட்களை உருவாக்கும் அல்லது திருத்தும் போது, இந்த கேடகரியை தேர்வு செய்ய முடியுகிறதா
    • இன்வென்டரியில் உள்ள கேடகரிகள் பட்டியலில் புதிய கேடகரி காணப்படுகிறதா

பார்க்கவும்:
புதிய ப்ராடக்ட் சேர்த்தல்